படத் தலைப்புக்கு நடந்த தகராறுகள் எல்லாம் ஓய்ந்து வெளியீட்டுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது, சதீஷ் நடிக்கும் ‘நாய் சேகர்’ திரைப்படமும், வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படமும்.
சதீஷ், பவித்ரா லக்ஷ்மி நடிப்பில், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதுகிறார். விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படங்களிலும் சிவகார்த்திகேயன் தலா ஒரு பாடல் எழுதியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இப்போது சதீஷ் படத்துக்கு ஒரு பாடல் எழுதுகிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இத்தகவலை சதீஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.