ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களாக மாறிய கீர்த்தி சுரேஷ்


தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘கீதாஞ்சலி’ திரைப்படம் மூலம் கதாநாயகியானார். அதைத் தொடர்ந்து, தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வரும் டிச.2 அன்று வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில், ஆர்ச்சா என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப்படம் 16-ம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால், கீர்த்தி சுரேஷின் தோற்ற வடிவமைப்புக்கு ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களில் உள்ள பெண்களை உதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளனர். ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களுடன், திரைப்படத்தில் இருக்கும் தன்னுடைய கதாபாத்திரத்தின் புகைப்படங்களையும் இணைத்து வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

x