காத்ரினா கைஃப் - விக்கி கௌஷல் திருமணம் : ஒமைக்ரான் வைரஸ் பரவலால் மாற்றமா?


பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான கத்ரினா கைஃப் - விக்கி கௌஷலின் திருமணம் வருகின்ற டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை மிகப் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. ஜெய்ப்பூரில் அமைந்துள்ள தனியார் ரிசாரட்டில் ‘டெஸ்டினேஷன்’ திருமணமாக நடக்கவுள்ளது.

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடியின் திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டே ஆவலாக எதிர்பார்க்கும் திருமணமாக இவர்களின் மணவிழா அமைந்துள்ளது. பப்பராஸி புகைப்படக்காரர்களின் கேமராக்களில் சிக்காமல் இருக்க தன்னுடைய திருமண ஆடைகள் குறித்து முன்னோட்டம் பாரப்பதற்காகக் கூட தன்னுடைய தோழிகளின் வீட்டை கத்ரினா பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாகவே காதலித்து வரும் இவர்களில் விக்கி கவுஷல் காத்ரினாவை விட ஐந்து வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக கற்பிதங்களைத் தகர்த்து நடக்கும் இவர்களின் திருமணத்திற்கு பல பிரபலங்கள், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். திருமணம் நடக்கும் சொகுசு ஹோட்டலின் ஐந்து நாட்களுக்கு வெளியாட்கள் வேறுயாரும் தங்கமுடியாதபடி ஒட்டுமொத்தமாக திருமணத்திற்காக முன்பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது புது வகையான கரோனா வைரஸான ஓமிக்ரோன் வைரஸ் பரவிவருவதால் விருந்தாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

x