தனீஷா முகர்ஜிக்கு கரோனா


பாலிவுட்டில் அறிமுகமாகி, 2007-ம் ஆண்டு தமிழில் வெளியான 'உன்னாலே உன்னாலே’ திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் தனீஷா முகர்ஜி. தற்போது முழுக்க முழுக்க பாலிவுட் திரைப்படங்களிலும், சீரியல் மற்றும் வெப் தொடர்களில் நடித்துவருகிறார். மேலும், இந்தி பிக் பாஸ் 7-வது சீசனில் 2-ம் இடத்தை வென்றார்.

தனிஷா முகர்ஜி கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் பாதிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. தொடரந்து அவர் கரோனா தொற்று சோதனை எடுத்துக்கொண்டார். சோதனை முடிவில் அவர் தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து தனீஷா முகர்ஜி கூறும்போது, “எனக்கு கோவிட் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனே வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன். என் நெருக்கமான நண்பர்கள் கவனமாக இருக்கவும்'' என்று தெரிவித்துள்ளார்.

x