சல்மான் கான் நடித்த ‘அந்திம்: தி ஃபைனல் ட்ரூத்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு திரையரங்குக்குள்ளேயே அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்துக்கொண்டாடும் காணொலிகள் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் சல்மான் கான், “அரங்குக்குள் பட்டாசு வெடிப்பது, பெரும் தீவிபத்து போன்ற இடர்களை ஏற்படுத்தலாம். அதன் மூலம் உங்கள் உயிருக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்து நேரலாம்” என்று கூறியிருப்பதுடன், பட்டாசுகளுடன் திரையரங்கத்துக்கு வருபவர்களைத் திரையரங்க உரிமையாளர்கள் அனுமதிக்க வேண்டாம் என்றும், உள்ளே நுழையும் இடத்திலேயே அவர்களைப் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“படத்தை ரசித்துப் பாருங்கள், ஆனால் இதுபோன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்!” என்று ரசிகர்களிடம் கோரியிருக்கிறார்!