பிட்லீ


அனிதா சம்பத்

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், பெரும்பாலும் திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராகவே வருவார். முதன்முறையாக, விமல் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடிக்கவுள்ளாராம்.

ஆனாலும், பிக் பாசுக்கு நீங்க போயிருக்க வேணாம்...

ஆர்ஷி கான்

தமிழ் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குப் பிறகு, தற்போதுதான் மீண்டு நடக்க ஆரம்பித்திருக்கிறார். இப்போது, ஹிந்தி 'பிக் பாஸ்' சீசன் 11-ல் கலந்துகொண்ட ஆர்ஷி கான் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அந்தச் சுவரு இன்னும் எத்தன பேரை காவு வாங்கப் போகுதோ?

பாத்திமா சனா ஷேக்

நடிகர் ஆமிர் கான் தன்னுடன் ‘தங்கல்’ திரைப்படத்தில் மகள் வேடத்தில் நடித்த பாத்திமா சனா ஷேக்கை 3-வது திருமணம் செய்யப்போகிறார் என்று ஊடகங்கள் எழுதியதால், கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் பாத்திமா சனா ஷேக். “நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். என்னிடம் கேட்காமல் இப்படிச் செய்தி போடாதீர்கள்” என்று காட்டமாகச் சொல்லியிருக்கிறார்.

நியாயமான கோபம்...

அமலா பால்

தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நடிக்க, அமலா பால் கேட்ட சம்பளத்தைப் பார்த்து தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். வழக்கமாக வாங்கும் சம்பளத்தைவிட அதிகப்படியாக அமலாபால் கேட்டதால், ஸ்ருதிஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது தயாரிப்பாளர் தரப்பு.

அமலாபால் நிராகரித்த வேடத்தில் ஸ்ருதி?!

விக்ரம்

விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா, திரையரங்கில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்விக்கே விடை கிடைக்காத நிலையில், சத்தமில்லாமல் ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் விக்ரம். அடுத்ததாக ராஜமௌலி இயக்கவுள்ள திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

பையன் என்ன படம் பண்றார் சார்?

x