நவீனகால கிராமத்துத் திரைப்படத்துக்கு இயக்குநர் பார்த்திபன் வாழ்த்து


தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கிராமத்து சினிமாக்களுக்கு என்று தனி மார்க்கெட் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் மாறி, திரைக்கதைகளின் பாணி வேறு வடிவில் உள்ளன. இந்நிலையில், கிராமத்துக் காதல் கதையாக உருவாகியிருக்கும் படம்தான் மகேந்திரனின் ‘பொண்ணு மாப்பிள்ளை’.

இப்போது கிராமங்கள் மாறிவிட்டன. கிராமத்து மனிதர்களும் அவர்களுக்குள் மலரும் காதலும் மாறிவிட்டது. இந்தக் காலத்துக்கேற்ற கிராமத்துக் காதல் கதையாக உருவாகி இருக்கிறது இந்தத் திரைப்படம்.

எதிலும் வித்தியாசமான ரசனை கொண்டவரும், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இத்திரைப்படக் குழுவுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பதினாறும் (Collection) பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள் என்று தயாரிப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கதாநாயகனாக நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரனுக்கும் இப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையட்டும்” என்று வாழ்த்தியிருக்கிறார்.

‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமான பவானியின் இளவயது தோற்றத்தில் நடித்த மகேந்திரன், அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். அதற்குப் பின் அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தின் மேல், அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கிறாராம் மகேந்திரன்.

x