கங்கனா ரணாவத்துக்கு டெல்லி சட்டப்பேரவை சம்மன்?


தனது சர்ச்சையான கருத்துகளால் தொடர்ந்து சிக்கலில் சிக்கிவருபவர் நடிகை கங்கனா ரணாவத். வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகப் பதிவிடுகிறார் என்று ட்விட்டர் நிறுவனம் அவரது ட்விட்டர் கணக்கை சில மாதங்களுக்கு முன் முடக்கியது. தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக வன்மத்துடன் பேசிவருவதை அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடிய சீக்கிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா ரணாவத் குறிப்பிட்டதாக அவர் மீது டெல்லி குருத்வாரா கமிட்டி, போலீஸில் புகார் அளித்துள்ளது. காவல் துறையும் கங்கனா மீது வழக்கு பதிந்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி டெல்லி சட்டப்பேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்கக் குழு, கங்கனாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. சட்டப்பேரவையில் நேரில் ஆஜராகி சீக்கியர் பற்றி, தான் சொன்ன கருத்துக்கு விளக்கம் அளிக்கவேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நடிகைக்குச் சட்டப்பேரவை சம்மன் அனுப்புவது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

x