பிரிட்டன் திரைப்படத்தில் சமந்தா!


இயக்குநர் பிலிப் ஜானுடன் சமந்தா

தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது, பாலிவுட்டில் ‘தி ஃபேமலி மேன்’ தொடரின் மூலம் பிரபலமடைந்து மேலும் ஒரு பாலிவுட் வெப் தொடரில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் சர்வதேச அளவில் தயாராகவுள்ள ஒரு புதிய திரைப்படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.

பிரபல இந்திய எழுத்தாளரான திமெரி என்.முராரி எழுதிய ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்’ என்ற நாவலைத் தழுவி, இத்திரைப்படம் அதே பெயரில் உருவாகவுள்ளது. இந்த நாவலில் வரும் கதாநாயகனுக்கு உதவும் அபு என்ற பெண் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயக்குநரான பிலிப் ஜான் இயக்க உள்ளார்.

பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ‘தி ஃபேமலி மேன்-2’ சீரிஸால் தான், சமந்தாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

“2009-ம் ஆண்டு தெலுங்கில் கௌதம் மேனன் இயக்கிய ‘யே மாயா சேசவே’ (‘விண்ணைத்தாண்டி வருவாயா’ தெலுங்கு ரீமேக்) படத்துக்காக நான் ஆடிஷனில் கலந்துகொண்ட போது, என்ன படபடப்புடன் இருந்தேனோ அதேபோல்தான் இப்போதும் இத்திரைப்படத்துக்கான ஆடிஷனில் உணருகிறேன்” என்று சமந்தா கூறியுள்ளார்.

x