பிக் பாஸ் வீட்டுக்குள் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரி


‘பிக் பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சி 52 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், 53-வது நாளுக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. நேற்றுவரை பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்குக் கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று, வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்குப் புதிதாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘வீட்டில் என்ன நடந்தாலும் அதைப் போட்டியாளர்கள் கண்டுகொள்ளாமலும், ரியாக்ட் செய்யாமலும் இருக்கவேண்டும் என்பதுதான் இன்றைய டாஸ்க்.

விதியை மீறி வீட்டில் நடக்கும் விஷயத்துக்கு ரியாக்ட் செய்தால், அவர்கள் நேராக எவிக் ஷன் ப்ராஸஸுக்கு அனுப்பப்படுவார்கள்’ என பிக் பாஸ் டாஸ்க் கொடுத்திருந்தார். இதையடுத்து இடி மின்னல் சத்தங்கள் வீட்டில் எழுப்பப்பட்டன. அதைக் கண்டுகொள்ளாமல் போட்டியாளர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வெளியாட்கள் சிலர் வீட்டுக்குள் நுழைந்து கேக் வைத்துவிட்டுச் சென்றனர். அடுத்ததாக வீட்டிற்குள் யாரோ வருவது போல் தெரிந்ததால்,பிரியங்கா யாரோ வருகிறார் எனக் கூறினார். அவர்கள் ஓடிச்சென்று பார்க்கக் கதவு திறந்தவுடன், என்ட்ரி கொடுத்தார் சஞ்சீவ் வெங்கட். அவரைக் கண்டவுடன் பிரியங்கா வேகமாகச் சென்று கட்டியணைத்து வரவேற்றார். மேலும், மற்ற யாரும் பெரிதாக ரியாக் ஷன் கொடுக்காமல் இருக்கவும், சஞ்சீவ் என்ன என்று கேட்க, “ரியாக்ட் பண்ணக் கூடாது என்று பிக்பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறார்” என வருண் தெரிவிக்க, சரி இப்போதாவது ரியாக்ட் பண்ணலாமே என்று சஞ்சீவ் கூற அனைவரும் கோஷமிட்டனர்.

கடந்த வாரத்திலிருந்து இதுவரை 3 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளனர். அதில், ஏற்கெனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிஷேக் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார். இதையடுத்து டான்ஸ் மாஸ்டர் அமீர் நுழைந்திருந்தார். இவர்களைத் தொடர்ந்து 3-வது வைல்ட் கார்டு போட்டியாளராக சஞ்சீவ் நுழைந்திருக்கிறார்.

x