‘மாநாடு’ வெளியீடு தள்ளிவைப்பு - சுரேஷ் காமாட்சி அறிவிப்பு


வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ திரைப்படம், கடந்த தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்துக்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கிய காரணத்தால், ‘மாநாடு’ வெளியீட்டுத் தேதியை நவ.25-க்கு தள்ளிவைப்பதாகத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார்.

நாளை ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர். #MaanaaduFrom25thNovember என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்துவந்தது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாநாடு திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். அவருடைய பதிவில், “நிறையக் கனவுகளோடு படைக்கப்பட்ட ஒரு படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

x