புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது


கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணமடைந்தார். இளம் வயதில் புனித் ராஜ்குமார் மரணித்தது பெரும் அதிர்ச்சியை மக்களிடையே உண்டு பண்ணியது. இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. புனித் ராஜ்குமார் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சமூக சேவை, கண்தானம், கல்வி உதவி எனப் பல தளங்களில் மனிதாபிமானத்துடன் பணியாற்றியவர். பலருக்கும் முன்மாதிரியாக இருந்த புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை திரைப்படமாகத் தயாராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்

புனித் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘யுவரத்னா’ திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் ஆனந்த்ராம் “புனித் ராஜகுமாரின் வாழ்க்கையைத் திரைக்குக் கொண்டு வர என்னால் இயன்ற முயற்சிகளைச் செய்வேன்” என்று கூறியிருக்கிறார். வேறு சில இயக்குநர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

x