மேடையில் வைத்து கணவரை வறுத்தெடுத்த பிரியங்கா சோப்ரா


பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்

கோலிவுட்டில் அறிமுகமாகி இன்று பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோனஸ் என்பவரைக் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய சமூக வலைத்தள கணக்கின் பெயரைப் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என்று மாற்றிய நிலையில், சமீபத்தில், தன்னுடைய சமூக வலைத்தள கணக்கின் பெயரிலிருந்த ஜோனஸ் பெயரை நீக்கினார். இதனைத் தொடர்ந்து, தன் கணவரைப் பிரியங்கா பிரியப்போகிறார் என்று வதந்திகள் பரவின. உடனே தன்னுடைய கணவரின் இன்ஸ்டாகிராம் பதிவில் காதலும் கமென்ட் செய்து, தங்களுக்குள் பிணக்கு இல்லை என்பதைச் சூசகமாக உலகிற்கு உணர்த்தினார்.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையா தமிழ்த் திரைப்படங்கள் ?

இந்நிலையில், பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸில் ‘ஜோனஸ் பிரதர்ஸ் ஃபேமலி ரோஸ்ட்’ என்ற பெயரில் ரோஸ்ட் நிகழ்ச்சி வெளிவந்துள்ளது. நிக் ஜோனஸுடன் உடன் பிறந்த இரண்டு அண்ணன்களான கெவின் ஜோனஸ், ஜோ ஜோனஸ் மற்றும் அவர்களது மனைவிகள், ஜோனஸ் சகோதரர்களின் அப்பாவான பால் கெவின் ஜோனஸ் மற்றும் ஜோனஸ் குடும்பத்தினருக்கு நெருக்கமான பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டர். கலந்துக் கொண்ட அனைவரும் ஜோனஸ் சகோதரர்களை முடிந்த அளவிற்குக் கடுமையாக நகைச்சுவை உணர்வுடன் வறுத்தெடுக்க வேண்டும். இதுதான் இந்த ரோஸ்ட் நிகழ்ச்சியின் சாரம்சம்.

ஜோனஸ் சகோதரர்கள்

தன் மாமனார் பார்வையாளராக வீற்றிருக்க மேடையேறிய பிரியங்கா சோப்ரா, தனது கணவரான நிக் ஜோனஸை அனைவரும் ரசிக்கும் விதமாக வறுத்தெடுத்துவிட்டார். அவர் பேசுகையில் “எனக்கும் என் கணவருக்கும் பத்து வருட வயது வித்தியாசம் இருந்தாலும் எங்களுக்குள் நாங்கள் நிறையச் சொல்லிக்கொடுத்துக் கொள்வோம். உதாரணத்திற்கு டிக்டாக் எப்படிப் பயன்படுத்துவது என்று நிக் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அதே போல் நான் வெற்றிகரமான சினிமா பயணம் எப்படி இருக்கும் என்று சொல்லிக்கொடுத்தேன்” என்று சொல்ல அரங்கம் மட்டுமல்ல நிக்கும் சேர்ந்து சிரித்துவிட்டார்.

இறுதியில் இருவரும் காதலுடன் தழுவிக்கொண்டதும் பார்வையாளர்கள் மனதை நெகிழச்செய்துவிட்டது.

x