நாகசைதன்யாவுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!


தமிழில் ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர், குறுகிய காலத்தில் தமிழின் முன்னணி நடிகையாக உயர்ந்தவர். தற்போது அதர்வாவுடன் இவர் நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. மேலும், ‘இந்தியன்-2’, ‘10 தல’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துவருகிறார் பிரியா பவானி சங்கர்.

இந்நிலையில், மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’, சூர்யா நடித்த ‘24’ திரைப்படங்களை இயக்கிய விக்ரம் குமார், அடுத்ததாக ஒரு வெப் சீரிஸ் இயக்கவுள்ளார். அந்த வெப் சீரிஸில் நாயகனாக நாகசைதன்யா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாகப் பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது இயக்குநர் விக்ரம் குமார், நாகசைதன்யா நடிப்பில் ‘தேங்க்யூ’ என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கிவருகிறார். அத்திரைப்படத்துக்கு அடுத்து இந்த வெப் சீரிஸ் தொடங்க உள்ளது.

x