வெளியானது ‘மாநாடு’ ஸ்னீக் பீக்


வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் ‘மாநாடு’. கடந்த தீபாவளியன்று இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ‘அண்ணாத்த’ திரைப்படத்துக்காக அதிக திரையரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால், ‘மாநாடு’ திரைப்படத்தை நவ.25க்குத் தள்ளி அறிவித்தார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ‘மாநாடு’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் ‘ஸ்னீக் பீக்’ காட்சிகள் வெளியாகியுள்ளன. ‘மாநாடு’ திரைப்படம் டைம் லூப் வகை திரைக்கதையைக் கொண்ட திரைப்படம் என்பதால், இது பல ஹாலிவுட் திரைப்படங்களின் காப்பியாக இருக்கக்கூடும் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ஸ்னீக் பீக் காட்சிகளில், எந்த ஹாலிவுட் படங்கள் எல்லாம் சமூக வலைதளத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தின் மூலக்கதையாக இருக்கும் என்று ஆராயப்பட்டதோ, அந்தப் படங்களின் பெயர்களை எல்லாம் சிம்புவே சொல்வதுபோல் காட்சி அமைந்துள்ளது வைரல் ஆகிவருகிறது

x