தன் மகனை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஸ்ரேயா கோஷல்


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் அற்புதமான பாடல்களைப் பாடியவர் ஸ்ரேயா கோஷல். இவர் குரலுக்கென்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. 2015-ம் ஆண்டு ஷிலாதித்யா முகோபாத்யாயா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா கோஷல்.

கடந்த மே மாதம் ஆண் குழந்தைக்கு அம்மாவானார் கோஷல். தனது மகன் தேவ்யான் பிறந்து 6 மாதங்களானதை அடுத்து மகனுடன் இருக்கும் புகைப்படத்தை நேற்று இன்ஸ்டாவில் பகிர்ந்து, அவருடைய மகனே தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வது போல் க்யூட்டான வாசகத்துடன் பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா கோஷல்.

அதில், "அனைவருக்கும் வணக்கம். நான் தேவ்யான். எனக்கு இன்றுடன் 6 மாத வயதாகிறது. என்னைச் சுற்றியுள்ள உலகத்தை கவனிப்பதில் நான் மும்முரமாக இருக்கிறேன். எனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்பது, சுமாரான நகைச்சுவைகளுக்கெல்லாம் சத்தமாகச் சிரிப்பது, எனது அம்மாவுடன் ஆழ்ந்த விவாதம் செய்வது என இருக்கிறேன். உங்கள் அன்பையும், ஆசிர்வாதத்தையும் தருவதற்கு மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரேயா கோஷலுக்கும் அவரது மகனுக்கும் திரைத் துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்

x