தமிழில் விஜய் ஜோடியாக 'தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிப் பின்னர், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்துவருகிறார். புகழ்பெற்ற ‘மேட்ரிக்ஸ்’ திரைப்படத்தின் 4-ம் பாகத்தில் தற்போது நடித்துவருகிறார் பிரியங்கா.
2018-ம் ஆண்டு பிரபல அமெரிக்கப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. பிரியங்காவை விட நிக் 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்துக்குப் பின்னர் பிரியங்கா, அனைத்து சமூக வலைதளங்களிலும் தனது பெயரைப் ‘பிரியங்கா சோப்ரா ஜோனஸ்’ என மாற்றியமைத்தார். ஆனால், நேற்று திடீரென கணவர் பெயரான ஜோனஸ் என்பதை நீக்கிவிட்டு, பிரியங்கா சோப்ரா என்று மட்டும் மாற்றினார்.
சமந்தா தன் முன்னாள் கணவரான நாக சைதன்யாவை பிரிவதற்கு முன், இதேபோல் சமூக வலைதள கணக்குகளின் பெயரை மாற்றியதால், அதேபோல் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் இருவரும் பிரியப் போகிறார்களோ என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
ஆனால், அவற்றுக்கெல்லாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் பிரியங்கா. கணவர் நிக் ஜோனஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ ஒன்றுக்குக் காதலுடன் கமென்ட் செய்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா கமென்ட் செய்துள்ள பதிவு: