கதை நம் இதயத்தைத் தொடவேண்டும் : சமந்தா


52-வது இந்திய சர்வதேசத் திரைப்பட திருவிழா, கோவாவில் சிறப்பாக நடந்துவருகிறது. இவ்விழாவில், திரைத் துறையில் பங்காற்றி வரும் பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்துவருகின்றனர். அவ்வகையில் சமந்தா இத்திரைப்படத் திருவிழாவில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். 50 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட கோவா திரைப்படத் திருவிழாவில், தென்னிந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் முதல் நடிகை என்ற பெருமை இதன் மூலம் சமந்தாவுக்குக் கிடைத்தது.

இந்நிலையில் கோவா திரைப்படத் திருவிழாவில் தன்னுடைய பாலிவுட் விஜயம், கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பாணி ஆகியவற்றைப் பற்றி பகிர்ந்துகொண்டார் சமந்தா. இவ்விழாவில் அவர் பேசும்போது, “நல்ல கதைகள் தேடிவந்தால் நான் நிச்சயம் ஆர்வமாக இருக்கிறேன். மொழி என்பது எனக்குப் பெரிய விஷயமல்ல. நல்ல திரைக்கதையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். கதை நம் இதயத்தைத் தொடவேண்டும். அது எனக்குப் பொருத்தமான கதையா எனப் பார்க்கவேண்டும். அந்த கதையையும், கதாபாத்திரத்தையும் என்னால் சரியாகக் கையாள முடியுமா எனப் பார்க்க வேண்டும். இந்த கேள்விகள் நான் ஒவ்வொருமுறை புதிய திரைப்படங்களை ஒப்புக்கொள்ளும்போது என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி. என்னைப் பொறுத்தவரை இதுதான் முக்கியமான விஷயம்” எனக் கூறியுள்ளார் சமந்தா.

x