மீண்டும் இணையும் சூர்யா - கீர்த்திசுரேஷ்


‘தானா சேர்ந்த கூட்டம்’

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ம் தேதி வெளியீட்டுக்குத் தயாராகிவருகிறது. ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்துக்குப் பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இத்திரைப்படத்துக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பாலா இயக்கத்தில் நடித்த ‘நந்தா’, ‘பிதாமகன்’ திரைப்படங்கள் சூர்யாவுக்குத் திருப்புமுனையாக அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யா வயதானவராகவும், இளமையானவராகவும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இளம் வயது சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கக் கீர்த்திசுரேஷிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கீர்த்திசுரேஷ் இதற்கு முன்னதாகவே ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்தார். வயதான சூர்யா ஜோடியாக, இந்தி நடிகை ஹேமமாலினி நடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

x