பிக் பாஸ்: அடுத்து வெளியேறுவது யார்?


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றம் நடக்கும். அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது அபிஷேக் ராஜா வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக சில தினங்களுக்கு முன்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

இசைவாணி

இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக இசைவாணி வெளியேற்றப்பட உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

x