பிக் பாஸ் 5 - வைல்ட் கார்டில் நுழையப்போவது யார்?


கமல்ஹாசன் தொகுத்துவழங்க, விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் 45 நாட்களைக் கடந்து சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்னப் பொண்ணு, பாவ்னி, நாடியா சாங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரைச் செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களில், தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, முதல் வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்றதால் நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். பிறகு, பிரபல யூடியூபரான அபிஷேக் ராஜா 2-வது நபராக வெளியேற்றப்பட்டார். அபிஷேக் ராஜா பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தவரை, அனைவரையும் மூளைச் சலவை செய்து தனது கருத்துகளைத் திணித்து வந்தார் என்று கூறப்பட்டது. மேலும், பிரியங்காவுடன் நட்பு பாராட்டி வந்தார் அபிஷேக்.

அபிஷேக் ராஜா

பிரியங்கா புகழ்பெற்ற நபர் என்பதால், அவருடன் இருந்தால்தான் தன் முகம் மக்களுக்குத் தெரியவரும் என்பதால்தான், அவருடன் இருக்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறிவந்தார். மேலும் என்ன டாஸ்க் நடந்தாலும் அதில் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால், அவர் மூலம் நல்ல கன்டென்ட்டுகள் கிடைத்தன. அவரது செயல் சக ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால், அவருக்கு எதிராக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமென்ட்ஸ் செய்து வந்தனர்.

பின்னர், 2-வது வார நாமினேஷன் லிஸ்டில் அபிஷேக், குறைவான வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா என அடுத்தடுத்து வெளியேறினர். இந்நிலையில் தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் 9 பேர் இந்த வார நாமினேஷனில் இருப்பதால், இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே கடந்த சீசன்களைப்போல, பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என சமூக வலைதளங்களில் கருத்து பகிரப்படுவதால், வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் அபிஷேக்கை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றால், அவர் செய்யும் குழப்பங்கள் மற்றும் சண்டைகள் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அபிஷேக் மீண்டும் வந்தால், நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

x