மீண்டும் இணையும் ப்ரியா பவானி சங்கர் - ஹரிஷ் கல்யாண் ஜோடி


செய்தி வாசிப்பாளராக இருந்து ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார். தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘குருதியாட்டம்’, ‘ஹாஸ்டல்’, ‘இந்தியன்-2’ போன்ற திரைப்படங்கள் இவ்வரிசையில் அடக்கம்.

இவர் நடிப்பில், கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஓ மணப்பெண்ணே’. ப்ரியா பவானி சங்கருக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார். அறிமுக இயக்குநரான கார்த்தி சுந்தர் இயக்கிய இத்திரைப்படம், தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ‘பெல்லி சூப்புலு’ திரைப்படத்தின் ரீமேக்.

இந்த திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மீண்டும் இதே கூட்டணி இணைய இருக்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகவிருக்கும் ஒரு திரைப்படத்தில், மீண்டும் ஹரிஷ் கல்யாணுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்கிறார்.

x