எப்பொழுது திருமணம் செய்ய வேண்டும் தெரியுமா? - பூஜா ஹெக்டே அட்வைஸ்


தமிழ் திரையுலகில், ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின்னர், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ள பூஜா ஹெக்டே, அத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவருகிறார். இதுதவிர தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்துவருகிறார்.

பூஜா ஹெக்டே, சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்துப் பேசியுள்ளார். “திருமண வயது வந்துவிட்டது என்பதற்காகவோ அல்லது திருமணம் செய்துகொள்ள இதுதான் சரியான நேரம் என்பதற்காகவோ திருமணம் செய்துகொள்வது கண்டிப்பாகச் சரியல்ல. வாழ்க்கை முழுக்க சேர்ந்து இருக்க முடியும் என ஒரு மனிதரோடு இருக்கும்போது தோன்றினால், அப்போது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்தான் வாழ்க்கைக்கு நல்ல கணவராக இருப்பார்'' என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பூஜா ஹெக்டேவின் கருத்துக்கு பல பெண்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

x