‘கைதி-2’ : மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி


கார்த்தி நடிக்கும் ‘விருமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், அவர் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாரகிவருகிறது. இந்நிலையில், அவர் 2019-ம் ஆண்டு நடித்த ‘கைதி’ திரைப்படம், ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘கைதி டெல்லி’ என்ற பெயரில், ஜப்பான் நாட்டில் நவ.19-ம் தேதி வெளியாகவுள்ளது.

கடல்கடந்து புகழ்பெற்றிருக்கும் ‘கைதி’ திரைப்படத்தின் 2-ம் பாகம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு, எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

‘கைதி-2’ திரைப்படத்துக்கான பெரும்பாலான காட்சிகள் முதல் பாகம் எடுக்கும்போதே படமாக்கிவிட்டதாகவும், 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

கார்த்தி - லோகேஷ் கனகராஜ், ‘கைதி’ படப்பிடிப்பில்

லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். கார்த்தி ‘விருமன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் வெளியான பின்பு, இருவரும் ‘கைதி-2’ பணிகளில் இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

x