வைரமுத்துவின் புதிய பிரம்மாண்ட படைப்பு ‘நாட்படு தேறல்’


வைரமுத்து - விக்ரம் சுகுமாரன்

தமிழ்த் திரைப்பட பாடல்களின் முக்கிய அடையாளங்களில் ஒருவர் கவிஞர் வைரமுத்து. திரைப்படப் பாடல்கள் தாண்டி சிறுகதைகள், கட்டுரை தொகுப்புகள், நாவல்கள் எனத் தமிழ் இலக்கிய வெளியில் பெரும்பங்கு ஆற்றிவருபவர்.

அந்த வகையில் தற்போது புதிய பிரம்மாண்ட முயற்சியாக, ‘நாட்படு தேறல்’ என்ற தலைப்பில் தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்கிவருகிறார் வைரமுத்து. தற்போது ‘நாட்படு தேறல்’ தொடரில் உருவாகும் பாடல் ஒன்றை, ‘மதயானைக்கூட்டம்’ மற்றும் விரைவில் வெளியாகவுள்ள ‘இராவண கோட்டம்’ ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கவுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கூறும்போது, “நாட்படு தேறல் தொடரில் ஒரு பாடலை இயக்க வாய்ப்பளித்த கவிப்பேரரசு வைரமுத்து ஐயாவுக்கு நன்றிகள். இது எனக்கு ஒரு பெருமிதமான தருணம்” என்று கூறியுள்ளார்.

x