மழையால் நிறுத்தப்பட்ட ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு


‘பீஸ்ட்’

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, ஜார்ஜியாவில் தொடங்கியது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. பின்னர் டில்லியிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் புரூக்கி, அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு, தற்போது சென்னை பெருங்குடியில் உள்ள தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இங்கு பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. ஷாப்பிங் மாலை கைப்பற்றும் தீவிரவாதிகளிடமிருந்து, மக்களைக் காப்பாற்றுவதுதான் இத்திரைப்படத்தின் கதையாக இருக்கக்கூடும் என்று அனுமானங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இறுதிக்கட்டமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது, படப்பிடிப்பு நடக்கும் பகுதி முழுக்க மழை வெள்ளம் சூழ்ந்ததால், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளம் வடிந்தால் மட்டுமே, படப்பிடிப்பு நடைபெறும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

x