இன்று வெளியாகும் துல்கர் படத்துக்கு எதிராக வழக்கு


குருப் வழக்கு- சித்தரிப்பு

துல்கர் சல்மான் நடிப்பில் இன்று வெளியாகும் ‘குருப்’ திரைப்படத்துக்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் தயாரித்து நடிக்கும் திரைப்படம் குருப். தமிழ் உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் உருவான இந்த திரைப்படம் இன்று(நவ.12) வெளியாகிறது. இத்திரைப்படம், 37 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் நடைபெற்ற ஒரு கொலைக் குற்ற வழக்கின் பின்னணியில் உருவாகியுள்ளது.

குருப்: ரியல் மற்றும் ரீல்

சுகுமார குருப் என்ற குயுக்தி பேர்வழி தனது பெயரிலான இன்சூரன்ஸ் தொகையை, தான் உயிருடன் இருக்கும்போதே அடைய சதித்திட்டம் போட்டான். இதற்காக சாக்கோ என்ற அப்பாவியை கொன்ற குருப், தான் இறந்ததுபோல சித்தரித்து காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்ற முயன்றான். போலீஸ் புலனாய்வில் இந்தக் குட்டு வெளிப்பட்டபோதும், அதன் பின்னர் கேரள காவல் துறையின் பிடியில் சிக்காது பெரும் தலைவலியானான். இந்த குருப் கதையின் பின்னணியில், திரில்லர்-க்ரைம் திரைப்படமாக துல்கர் சல்மானின் ’குருப்’ உருவாகி உள்ளது.

குருப்- திரைப்பட போஸ்டர்

குருப் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், கொச்சினைச் சேர்ந்த ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் குருப் திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுநல வழக்காக தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், சுகுமார குருப் என்ற தனிநபரை பாதிக்கும் வகையில், தனியுரிமை மீறலாக குருப் திரைப்படம் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அது தொடர்பாக பதில் அளிக்கும்படி, மாநில, மத்திய அரசுகள், குருப் தயாரிப்பு நிர்வாகம் மற்றும் இன்டர்போல் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. குருப் திரைப்படத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

சுகுமார குருப் குற்ற வழக்கு தொடர்பான முழுமையான புதிர்களையும், புலனாய்வையும் இங்கே அறிந்து கொள்ளலாம்.

கேரளத்தை உறையவைத்த குரூர ‘குருப்’- 37 ஆண்டுகளாகத் தொடரும் மர்மம்!

x