’பீஸ்ட்’: ஜார்ஜியாவில் இந்தியா - பாக். எல்லை?


’பீஸ்ட்’ விஜய்

கோலிவுட்டின் தற்போதைய அதிக எதிர்பார்ப்புக்குரிய திரைப்பட தயாரிப்புகளில் முன்னிற்கிறது பீஸ்ட். விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாய் தயாராகும் இந்தத் திரைப்படத்தின் பிரதான படப்பிடிப்பு, பல கட்டங்களாக ஜார்ஜியாவில் நடைபெற்றது. தற்போது மற்றுமொரு கூடுகையாக, அங்கே திரைப்படத்தின் கிளைமாக்ஸை படமாக்க இருக்கிறார்கள்.

படத்தின் முத்தாய்ப்பான ஆக்‌ஷன் விரட்டல் காட்சிகளை, இந்தியா - பாகிஸ்தான் எல்லையை பிரதிபலிக்கும் வகையில் படமெடுத்தாக வேண்டும். தீவிரவாதிகள் - பாதுகாப்பு படையினருக்கு இடையிலான நிஜ ஷூட்டிங் அங்கே தொடர்ந்து வருவதால், காஷ்மீர் எல்லை சாயலை ஜார்ஜியாவில் உருவாக்க முடிவு செய்தனர். இதற்காக இந்திய எல்லைப் பகுதி மற்றும் பாகிஸ்தானை பிரதிபலிக்கும் கலையாக்கம் அங்கே உருவாகி வருகிறது. ஜார்ஜியாவில் எடுக்கப்படும் வித்தியாசமான பின்னணியிலான சண்டைக் காட்சிகள் வெகுவாய் பேசப்படும் என்கிறார்கள் ’பீஸ்ட்’ விவரமறிந்தோர்.

’மாஸ்டர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமாருடன், ’பீஸ்ட்’ மூலமாக மீண்டும் கைகோக்கிறார் விஜய். வித்தியாசமான வேடத்தில் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர். விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே தோன்றுகிறார்.

x