காவல் துறை சம்மனை நிராகரித்த ஆர்யன் கான்


பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கடந்த மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய அளவில் ஆர்யன் கான் வழக்கு கவனம் ஈர்த்தது. கடந்த சில நாட்களுக்கு முன், அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்து சிறையை விட்டு வெளிவந்தார்.

வார இறுதியில் அவர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ஆஜராக வேண்டும் என்பது ஜாமீன் நிபந்தனைகளில் ஒன்று. அந்தவகையில், சமீபத்தில் அவருக்குப் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தனக்குக் காய்ச்சல் என்றும் உடல்நிலை சரியில்லை என்றும் கூறி அந்த சம்மனை நிராகரித்துள்ளார் ஆர்யன் கான். அவருடன் கைதாகி ஜாமீனில் வெளிவந்த அவரது நண்பன் அர்பாஸ் மட்டும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

x