சர்ச்சை விளம்பரத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ்!


அல்லு அர்ஜூன்

மாநில அரசுப் பேருந்துகளை கிண்டலடித்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த விளம்பரத்துக்காக, தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

தனியார் ’பைக் டாக்ஸி’ நிறுவனத்தின் செயலிக்காக, விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார் தெலுங்கின் ’ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜுன். அந்த வீடியோ விளம்பரத்தில் தோன்றும் அல்லு அர்ஜுன், மாநில அரசுப் பேருந்துகளை கிண்டலடித்தும் தனியார் பைக் டாக்ஸியை ஊக்குவித்தும் பேசுவார். இதற்கு மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

’எளிய மக்களுக்கான சேவையில் ஈடுபடும் அரசுப் பேருந்துகளும், லாபம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட தனியார் பைக் டாக்சி நிறுவனமும் ஒன்றா?’ என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து மேற்படி விளம்பரத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கும், பைக் டாக்ஸி நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

x