ஒரு மாதத்துக்கு முன்பு, தனது கணவர் நாகசைதன்யா்வோடு ஏற்பட்ட திருமண முறிவுக்குப் பிறகு பயணம், உடற்பயிற்சி என்று நேரத்தைச் செலவிட்டுவருகிறார் சமந்தா. அடுத்தடுத்து பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.
இந்நிலையில், இந்த மாதம் 20-28 ஆகிய தேதிகளில், கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவராக சமந்தாவும் அழைக்கப்பட்டுள்ளார். பாரம்பரியமிக்க கோவா சர்வதேச திரைப்பட விழாவில், தென்னிந்தியாவிலிருந்து சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்ளும் முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சமந்தா.