மீண்டும் இரட்டை வேடத்தில் சூர்யா


சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், சர்ச்சைகளையும் கிளப்பிவரும் நிலையில், அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதை அடுத்து, சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பாக ‘பேரழகன்’, ‘வாரணம் ஆயிரம்’, ‘வேல்’, ‘மாற்றான்’, ‘24’ உள்ளிட்ட சில படங்களில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x