அடி, உதை.. நடிகை மருத்துவமனையில் அனுமதி: கணவர் கைது


பூனம் பாண்டே

மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. “2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் உடலில் துணி இல்லாமல் வீடியோ வெளியிடுவேன்” என்பது போன்று அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வருவது பூனம் பாண்டேவின் வழக்கம். இவர் கடந்த ஆண்டு, சாம் பாம்பே என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மும்பை புறநகர்ப் பகுதியில் வசித்து வந்தனர்.

கணவருடன் பூனம் பாண்டே

இந்நிலையில், நடிகை பூனம் பாண்டேவுக்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று திடீரென கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது சாம் பாம்பே சரமாரியாகத் தாக்கியதில், நடிகை பூனம் பாண்டே பலத்த காயம் அடைந்திருக்கிறார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நடிகை பூனம் பாண்டே தன் கணவர் மீது மும்பை போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்த போலீஸார், சாம் பாம்பேவைக் கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x