அனுஷ்காவின் பிறந்த நாள் பரிசாக புதிய படம் அறிவிப்பு


அனுஷ்கா

தென்னிந்திய சினிமாக்களின் பிரதான தாரகையாக வலம்வரும் அனுஷ்காவின் பிறந்த நாளான இன்று(நவ.7), அவரது புதிய படத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம், அனுஷ்காவுடனான தனது 3-வது திரைப்படத்தை அறிவித்துள்ளது. அனுஷ்காவின் இந்த 48-வது திரைப்படத்தை பி.மகேஷ் பாபு இயக்கவுள்ளார். தயாரிப்பு நிறுவனத்துடனான முந்தைய ’பாகமதி’ போலவே 4 மொழிகளில் புதிய திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுஷ்கா பிறந்தநாளை முன்னிட்டு, இந்தப் புதிய திரைப்படத்தின் அறிவிப்பை மட்டும் தற்போதைக்கு வெளியிட்டிருக்கிறார்கள். திரைப்படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. பிறந்தநாளையொட்டி 'ஸ்வீட்டி'(அம்மணியின் செல்லப் பெயராம்!)-க்கு சமூக ஊடகங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

x