பிட்லீ


“இனிவரும் தீபாவளிகளை எல்லாம் ஆதரவற்றவர்களுடன்தான் கொண்டாடுவேன்” என்று அறிவித்திருக்கிறார் வாணி போஜன். இந்தத் தீபாவளியை அப்படிக் கொண்டாடிவிட்டுதான் இப்படிச் சொல்லியிருக்கிறார்.

உலக அழகிங்க வாக்குறுதி மாதிரி ஆகிடாதுல்ல...

சமீபத்தில் ரெஜினா கசாண்ட்ரா மதுபான விளம்பரத்தில் நடித்துக் கண்டனத்துக்கு ஆளான நிலையில், இப்போது காஜல் அகர்வால் தனது கணவருடன் இணைந்து தோன்றும் மதுபான விளம்பரம் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ளார். இன்னும் சில நடிகைகளும் இதில் ஆர்வம் காட்டுகிறார்களாம்.

நாய் விற்ற காசு குரைக்காதுன்னு சொல்லுவாங்களோ..!

தொடர்ந்து தங்கச்சி கதாபாத்திரங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், மீண்டும் பெண் மைய திரைப்படங்களில் கவனம் செலுத்தப் போகிறார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‘குட்லக் சகி’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாம்.

ஆமாம்மா... இல்லாட்டா ரஜினிக்கு அம்மாவா நடிக்க கூப்பிட்டாலும் கூப்பிட்டிருவாங்க..!

தீபாவளியன்று, தன்னுடைய 2 படங்கள் ரிலீஸ் ஆவதில் படு குஷியாக இருக்கிறார் மிர்ணாளினி ரவி. விஷாலுக்கு அவர் ஜோடியாக நடித்துள்ள ‘எனிமி’ திரையரங்கிலும், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ ஓடிடி தளத்திலும் வெளியாகவுள்ளதாம்.

பொங்கலுக்கும் டபுள் ட்ரீட் உண்டா?

x