இந்திய சினிமாவில் முதன்முறையாக மைக் டைசன்: ஃபர்ஸ்ட் லுக் வெளியானது


மைக் டைசன்

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் ‘லைகர்’. இந்த திரைப்படத்தைப் பூரி ஜெகன்னாத், கரண் ஜோகர், அபூர்வா மேத்தா, சார்மி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாகக் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்தியத் திரைப்படத்தில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு மைக் டைசன் இடம்பெற்றுள்ள புதிய போஸ்டர் ஒன்றை ‘லைகர்’ படக்குழு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல இந்திய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிறது. அடுத்த ஆண்டு இத்திரைப்படம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

x