‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர் காலண்டர் மாற்றப்படும் - தா.செ.ஞானவேல்


‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர் காலண்டர்

நவம்பர் 2-ம் தேதி, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. பழங்குடிகளான இருளர்கள் மீது அதிகாரவர்க்கம் நடந்தும் கொடுமையைக் கடுமையாகச் சாடி, இத்திரைப்படம் உருவாகியுள்ளது. காவல் துறையினரின் வன்முறைகள் இருளர்கள் மீது எப்படி நடத்தப்படுகின்றன என்று பார்ப்பவரை பதைபதைக்கவைக்கும் காட்சி அமைப்புகள் அமைந்திருக்கின்றன. இத்திரைப்படத்தில், இருளர் இனத்தவரைச் சட்டத்துக்குப் புறம்பாக லாக்கப்பில் வைத்து அடித்துக்கொல்லும், காவல் துறை அதிகாரியாக வரும் கதாபாத்திரத்தின் வீட்டில் நடக்கும் காட்சியின்பின்னணியில், வன்னியர் இனத்தின் அடையாளமாகப் பயன்படுத்தப்படும் அக்னி கலசம் கொண்ட காலண்டர் காட்டப்பட்டிருக்கிறது. படம் வெளியானதும் இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

தற்போது, இத்திரைப்படத்தின் கதை உருவாக்கத்துக்கும், வசனங்களை வட்டார வழக்கில் அமைக்க உதவிய எழுத்தாளரான கண்மணி குணசேகரன் இது தொடர்பாக பேஸ்புக் பதிவொன்றைப் பதிவிட்டிருந்தார்.

கண்மணி குணசேகரனின் பேஸ்புக் பதிவு:

கண்மணி குணசேகரனின் இந்தப் பதிவைப் பார்த்த பின்பு, தா.செ.ஞானவேல் கண்மணி குணசேகரனைத் தொடர்புகொண்டு, பீரியட் திரைப்படமாக உருவாக்கியதால் கலை வடிவமைப்பில் பிழை ஏற்பட்டுவிட்டது என்றும், அந்த காலண்டரை சாமி காலண்டராக மாற்ற அமேசான் நிறுவனத்திடம் சொல்லிவிட்டதாகவும் கூறியுள்ளார். இன்னும் 3 நாட்களில், இந்த காலண்டர் மாற்றியமைக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ பதிப்பு வெளியாகும் என்றும் இயக்குநர் கூறியுள்ளாராம்.

x