புனித் ராஜ்குமாரின் சேவைகள் என் மூலம் தொடரும்! - விஷால்


கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் பல சமூக சேவைகளைச் செய்துவந்தார். கன்னட திரையுலக ரசிகர்களால் அவர் ‘அப்பு’ என்று அன்புடன் அழைக்கப்படுவதற்கு அவருடைய தயாள குணமும் ஒரு முக்கியக் காரணம். இறந்த பின்பு அவரது கண்கள் தானம் செய்யப்பட்டு நவீன சிகிச்சை மூலம் 4 பேருக்குப் பார்வை வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல சமூக சேவைகளைச் செய்துவந்த புனித் ராஜ்குமார், 1,800 ஏழை பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று உதவி வந்தார். தற்போது புனித் ராஜ்குமாரின் மரணத்துக்குப் பிறகு அவர் செய்துவந்த தொண்டு செயல்கள் தடைப்பட்டு நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் உதவியில் படித்து வரும் 1,800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்த ஆண்டு முதல், தான் ஏற்பதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். புனித் ராஜ்குமாரின் சேவைகள் தன் மூலமாகத் தொடரும் என்று விஷால் அறிவித்துள்ளார்.

x