விஜய்க்கு ஜோடியாகவுள்ள கியாரா அத்வானி


கியாரா அத்வானி

நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தனது 66-வது திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்பதைக் குறித்து, சில நடிகைகளின் பெயர்கள் அனுமானிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது கியாரா அத்வானி அத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ள கியாரா அத்வானி தற்போது விஜய்யின் 66-வது திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகப்போகிறார் என்று கூறப்படுகிறது. விரைவில், இதுபற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகலாம் எனத் தெரிகிறது.

x