மகளிடம் விளையாட்டு: ’தாயுமானவரா’ன சதீஷ்


மகளுடன் சதீஷ்

நகைச்சுவை நடிகர்கள் திரைக்கு அப்பால் நிஜ வாழ்க்கையிலும் ரசிக்க வைப்பதுண்டு. நடிகர் சதீஷ் அப்படியான புகைப்படங்களை இன்று(அக்.28) ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மனைவி வேறு வேலையாக வெளியே சென்றிருக்கும்போது, தூங்கி எழும் மகளிடம் தான் நடத்தும் ஜாலி நாடகத்தைப் படமாக பகிர்ந்திருக்கிறார். அதில் சேலையை மேலே போர்த்தியவாறு, கையில் மகளை ஏந்தியவராக, ‘இனிமே அம்மா எங்கேன்னு கேப்ப..?’ என்று பதிவிட்டிருக்கிறார்.

இதுவரை நகைச்சுவை நடிகராக, கதாநாயகனின் நண்பனாக சிறிதும் பெரிதுமான வேடங்களில் வலம்வந்த சதீஷ், வெளியீட்டுக்காக காத்திருக்கும் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

x