‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம்வருகிறார். தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார். அடுத்தடுத்து ஹிந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ள பூஜா ஹெக்டே, மும்பையில் ஒரு வீடு வாங்கியுள்ளார். அந்த வீட்டில் நடைபெறும் வேலைகளை அவர் மேற்பார்வையிட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். “எனது கனவுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்,” என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பூஜா குடும்பத்தினர், மும்பையில் செட்டிலாகி உள்ளனர். பூஜாவின் அம்மாதான் தற்போது வீட்டின் கட்டிட வேலைகளை மேற்பார்வை செய்துவருகிறாராம்.