சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு


நடிகை சன்னி லியோன் நடிப்பில், வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் தமிழ் ஹாரர் நகைச்சுவை திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இத்திரைப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை உட்படப் பல நகைச்சுவை நடிகர்களும் நடித்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து சன்னி லியோன் நடித்த முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட, 2-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததை்யொட்டி, சன்னி லியோன் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

x