மோசடி வழக்கிலிருந்து ஷில்பா ஷெட்டி விடுவிப்பு


பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாச வீடியோ எடுத்து பதிவேற்றிய விவகாரத்தில் சிக்கி கைதாகியிருந்த நிலையில், ஷில்பா ஷெட்டி மீதும் அவரது தாயார் சுனந்தா மீதும் லக்னோவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘லோசிஸ் வெல்னஸ் சென்டர்’ என்ற பெயரில், நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர்களை திறந்தார் ஷில்பா ஷெட்டி. இந்நிறுவனத்தின் பெயரில் கிளைகள் திறக்க, பலரிடம் கோடிக்கணக்கில் ஷில்பா ஷெட்டி பணம் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்குப் பிறகு அந்நிறுவனத்தின் வியாபாரத்தை கைவிட்டார் ஷில்பா ஷெட்டி. லக்னோவைச் சேர்ந்த ஜோத்ஜனா சவுகான், ரோஹித் வீர் சிங் என்ற 2 தொழிலதிபர்கள் நடிகை ஷில்பா ஷெட்டியிடம், பிட்னஸ் சென்டர் கிளைகளை தொடங்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், ஆனால், கிளைகள் தொடங்கப்படவே இல்லை; அத்தோடு ஷில்பா ஷெட்டி பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என்று போலீஸில் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில், ஷில்பா ஷெட்டி உட்பட பலர் மீது எப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டது. தற்போது விசாரணைக்குப் பிறகு, ஷில்பா ஷெட்டிக்கும் அவரது தயாருக்கும் இந்த மோசடியில் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. எனவே, அவர்கள் பெயர்கள் வழக்கிலிருந்து நீக்கப்பட்டது என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பணத்தை இழந்தவர்கள் தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

x