வெப் சீரிஸில் அறிமுகமாகும் த்ரிஷா


த்ரிஷா

தமிழ் திரையுலகில் மாபெரும் படைப்பாக, மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை நாச்சியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷா, அதையடுத்து ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸ் மூலம் ஓடிடி தளத்துக்கு அறிமுகமாகவுள்ளார். தெலுங்கில் தயாராகும் இத்தொடரை, சூர்யா வாங்கலா என்ற புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளார். இத்தொடரின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. க்ரைம் த்ரில்லர் கலந்த புலனாய்வு திரைக்கதையுடன் உருவாகும் இத்தொடர், சோனி லிவ் ஓடிடி தளத்தில் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

x