காஜல் கதாபாத்திரத்தைக் கைப்பற்றிய தமன்னா


கடந்த ஆண்டு, கெளதம் கிச்சுலு என்பவரைத் திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், அதன்பிறகும் தான் கமிட்டாகியிருந்த ‘ஆச்சார்யா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். அதோடு, நாகார்ஜுனாவின் ‘கோஸ்ட்’ திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், தான் கர்ப்பம் தரித்ததையடுத்து அத்திரைப்படத்திலிருந்து விலகினார் காஜல்.

அதன்பிறகு ‘கோஸ்ட்’ திரைப்படத்தில், காஜலுக்கு பதில் இலியானா நடிப்பதாகச் செய்திகள் வெளியானது. தற்போது அந்த வேடத்தில் தமன்னாவை நடிக்க வைக்கப் பேசி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதவிர, அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்கான ‘போலா சங்கர்’ படத்திலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாகத் தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்த வேடத்தில் நடிக்க தமன்னா கமிட்டாகியிருக்கிறார்.

x