“ராவாக குடிப்பேன்”: விஸ்கி விளம்பரத்தால் ரெஜினாவுக்கு எழும் கண்டனங்கள்


சமூக வலைதளங்களில் பல நடிகைகள், பல பொருட்களை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அவர்களைத் தொடரும் பாலோயர்களுக்கு ஏற்றபடி, அதற்கான தொகையை லட்சக்கணக்கில் நிறுவனங்களிடமிருந்து பெற்றுவருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை ரெஜினா 'விஸ்கி' நிறுவனத்துக்கான விளம்பரமொன்றை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘விஸ்கியை ராவாக குடிப்பதுதான் எனக்குப் பிடிக்கும். விஸ்கியின் இயற்கை மணம் அற்புதமானது’ என்று அந்த விஸ்கியைப் புகழ்ந்து வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

ரெஜினாவின் இந்த விளம்பரப் பதிவில் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். “ஆல்கஹாலை விளம்பரப்படுத்த வேண்டாம், வெளிப்படையாக இப்படி ஆல்கஹாலுக்கு விளம்பரம் செய்ய அனுமதி இருக்கிறதா” என பலவிதமான கண்டனக் கமென்ட்டுகளை ரசிகர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

x