2021-ம் ஆண்டு, மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகிபாபு, சீலா ராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் தற்போது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ளது. வெளியீட்டின்போது பல சோதனைகளைச் சந்தித்தது ‘மண்டேலா’ திரைப்படம். ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஓடிடி தளத்தில் வெளியீடு செய்ததால், அந்நிறுவனத்துக்குத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ரெட் கார்ட் போட்டது. அதனால், அந்நிறுவனம் தயாரித்த ‘மண்டேலா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட முடியாமல்போனது. இதைத் தொடர்ந்துஇ இத்திரைப்படம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் ஏப்ரல் 4-ம் தேதி வெளியிடப்பட்டது அடுத்தநாளே நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியானது. இப்படிப் பல சோதனைகளைக் கடந்து இன்று சாதனை படைத்துள்ளது ‘மண்டேலா’ திரைப்படம்.