வழக்கறிஞராக நடிக்கும் வரலட்சுமி சரத்குமார்


வரலட்சுமி சரத்குமார்

தொடர்ந்து தன் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் வரலட்சுமி சரத்குமார். கதாநாயகியாக மட்டுமல்லாமல் அழுத்தமான கதாபாத்திரம் என்றால் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது ‘அரசி’ திரைப்படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. சூரிய கிரண் இயக்கும் இப்படத்தில், கார்த்திக்ராஜு சித்தார்த்ராய், சந்தானபாரதி, சாப்ளின் பாலு, அந்தோணிதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படப்பிடிப்பு கேளம்பாக்கம், வண்டலூரில் நடக்கிறது.

x