ஓடிடி-ல் வெளியாகும் ‘எம்ஜிஆர் மகன்’


பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா, சமுத்திரக்கனி, நந்திதா நடித்துள்ள திரைப்படம் ‛எம்.ஜி.ஆர். மகன்'. சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். கிராமத்துக் கதைக்களத்தில் அப்பா - மகன் இடையே நடக்கும் பாசத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கரோனா பெருந்தொற்றால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இப்போது திரையரங்கங்கள் திறக்கப்பட்ட போதிலும், படத்தை ஒடிடியில் வெளியிட முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி வருகின்ற தீபாவளி தினமான நவ.4 அன்று, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’, விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’ திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

x