செக் குடியரசு சென்னையில் நடத்தும் ‘செக் திரைப்பட விழா’


இண்டோ சினி அப்ரிஷியேஷன் அமைப்புடன் இணைந்து செக் குடியரசின் தூதரகத்தின் சார்பில், 2 நாட்கள் சென்னையில் திரைப்படவிழா நடத்தப்படவுள்ளது. செக் மொழியிலான 3 திரைப்படங்கள் இத்திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளன. தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமை விருந்தினராகவும், செக் குடியரசின் இந்தியத் தூதர் மிலன் ஹோவர்கோ சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ள இத்திரைப்பட விழா, அக்டோபர் 22, 23 தேதிகளில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம், தாகூர் ஃபிலிம் சென்டரில் நடக்கவுள்ளது. 22-ம் தேதி மாலை 5.30 மணிக்குத் தொடங்கும் இவ்விழாவில், மாலை 7 மணிக்கு ‘வுமன் ஆன் தி ரன்’, 23-ம் தேதி மாலை 6 மணிக்கு ‘கோல்யா’, அதைத் தொடர்ந்து ‘ஐ என்ஜாய் தி வோர்ல்ட் வித் யூ’ என்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இத்திரைப்பட திருவிழாவைப் பொதுமக்கள், ‘இண்டோ சினி அப்ரிஷியேஷன்’ அமைப்பின் மூலம் இலவச அனுமதிச் சீட்டு வாங்கி கண்டுகளிக்கலாம்.

9840151956/8939022618 என்ற எண்களில் அழைத்து அனுமதிச் சீட்டு பெறலாம்.

x